குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், INDI கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.
அப்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.