உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தராகண்டின் உத்தரகாசியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் நௌகான் காட் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், ஒரு சில கட்டடங்கள் சேதமடைந்தன. கார் ஒன்று இடிபாடுகளுக்குள் புதைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.