தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும்,
இதன் காரணமாக, இன்று முதல் 10ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
நாளை மறுதினம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.