தென்கொரியாவில் நடைபெற்ற உலக வில்வித்தை ஆடவர் கூட்டு பிரிவின் இறுதிப்போட்டியில், இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
குவாங்ஜு நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில், ரிஷப் யாதவ், அமன் சைனி மற்றும் பிரத்மேஷ் அடங்கிய இந்தியா வீரர்கள் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
பிரான்ஸ் அணி வெள்ளியும், ஸ்லோவேனியா அணி வெண்கலப் பதக்கதையும் கைப்பற்றியது.