டெல்லியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், மழை குறைந்ததை அடுத்து ஆற்றின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
தொடர் கனமழை மற்றும் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், டெல்லி மாநகரில் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
குடியிருப்புப் பகுதிகளிலும், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.
மக்கள் எச்சரிக்கையாக இருப்பதற்காக ஆற்றின் நீர்மட்டத்தை டிஜிட்டல் பலகை மூலம் மக்களுக்கு அரசு தெரியப்படுத்தியது. இந்நிலையில் ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.