ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவள்ளி மலைப்பகுதியில் மிக உயர்ந்த சிகரமான அபு மலைப்பகுதியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மலை உச்சியில் இருந்து தண்ணீர் பாய்ந்தோடி வருவதால், அப்பகுதிக்குப் பொதுமக்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.