கன்னியாகுமரி கடல் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டாலும், அதில் தொடர்ந்து செல்லச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர்ச் சிலையினை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாயில் கடந்த ஜனவரியில் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டது.
இந்தக் கண்ணாடி பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதியில் மட்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாலத்தில் தொடர்ந்து செல்லச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.