நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர்.
காலக்கெடு முடிந்தும் பதிவு செய்யாத வாட்ஸ்ஆப் , பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. இதனைக் கண்டித்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தலைநகர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதியில் பேரணியாகச் சென்ற இளைஞர்கள், நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். முகப்பு வாயிலை சேதப்படுத்தி தீ வைத்து எரித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது…
இதனிடையே போராட்டத்தின்போது போலீசார் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 14-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.