ஜம்மு – காஷ்மீர் மாநிலம், குல்காமில் உள்ள கட்டார் காட்டில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்த நடவடிக்கையில் ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டதாகவும், ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து எல்லைப் பகுதிகளில் ராணுவ கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.