திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
வார இதழ் ஒன்று தனக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்டதாகத் திமுக எம்பி டி.ஆர்.பாலு, மான நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, டி ஆர் பாலுவுக்கு மான நஷ்ட ஈடாக, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட வார இதழுக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து வார இதழ் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஆணையிட்டனர்.