தேசக் கௌரவத்தை பேணிக் காப்பதில் பிரதமர் மோடியிடம் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு பாடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு கொள்கை நிபுணரான ஷாகி சலோம் வலியுறுத்தியுள்ளார். அசாதாரண சூழல்களை அசாத்தியமாகக் கையாண்டு சர்வதேச அளவில் பிரதமர் மோடி முன்னுதாரணமாக மாறியிருப்பது எதனால்?…. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்.
பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இந்தியாவில் மட்டுமல்ல… உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் பிரதமர் மோடி கொண்டிருக்கும் அக்கறை, பெரியண்ணன் நாடான அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்துள்ளது.
இந்தியாவோடு நட்பு பாராட்டினால் தோள் கொடுப்பேன், நசுக்க நினைத்தால் தோல் உரிப்பேன் என்ற பிரதமர் மோடியின் அரசியல் ஆளுமையை கண்டு சர்வதேச தலைவர்கள் பலரும் விரல் வைத்து ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது செயல்பாடு அன்றாடம் மேம்பட்டு வருகிறது.
உலகத்தலைவர்கள் மட்டுமல்ல, பல்துறை நிபுணர்களும் பிரதமர் மோடியை ஓர் முன்னோடியாகப் பார்க்கும் சூழல் இன்று உருவாகியிருக்கிறது. எந்தவொரு சவால்களையும் நிதானமாக எதிர்கொள்ளும் திறனும் அதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இப்படி நாளுக்கு நாள் பிரதமர் மோடிக்கு FAN BASE கூடிக்கொண்டே செல்ல, அதில் புதிதாக ஒரு நபர் இணைந்திருக்கிறார். அவர் தான் இஸ்ரேல் பாதுகாப்பு கொள்கை நிபுணரான ஷாகி சலோம். அமெரிக்காவே எதிரில் நின்றாலும் எதிர்த்து நிற்கும் பிரதமர் மோடியின் துணிச்சலுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோடியிடம் பாடம் கற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்த போதும் சிறிதும் அலட்டிக்கொள்ளதாகப் பிரதமர் மோடி, சீனா, ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி, அதிபர் ட்ரம்பையே அலறவிட்ட சம்பவம் சர்வதேச அரசியலில் மாஸ்ட்ர் ஸ்ட்ரோக் எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ வார்த்தைகள் விட்ட போதும், அமைதி காத்த மோடி, அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல், ட்ரம்பையே இறங்கி வரச் செய்த சம்பவம், தேச மதிப்பை காப்பதில் மோடி எவ்வளவு மன உறுதியுடன் உள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாக ஷாகி சலோம் புகழாரம் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்குத் தாம் தான் காரணம் என ட்ரம்ப் மார்த்தட்டி கொண்டிருக்க, அதையும் LEFT HANDLE-ல் டீல் செய்த மோடிக்கு ஓர்ச் சல்யூட் என ஷாகி சலோம் வியப்புடன் கூறியிருக்கிறார்.
இந்தியாவிடம் வம்பிழுத்தால் விட்டு வைக்க மாட்டோம் எனப் பாகிஸ்தானுக்கு வேட்டு வைத்து, போர் சூழலை மோடி அருமையாகக் கையாண்டு இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தப் படிப்பினையை தான் பெஞ்சமின் நெதன்யாகு மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
காசாவின் நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 20 பேர் உயிரிழந்திருக்க, தாக்குதல் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ராணுவ தலைமை தளபதியும் தனித்தனியே அளித்த பதில்கள் சர்வதேச அளவில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஷாகி சலோம் கவலை தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் போது பொதுமக்கள் சிலர் உயிரிழப்பதை தவிர்க்க முடியாது என்ற கோணத்தில் அமைந்த பதில்கள் சர்வதேச சட்டத்தை மீறும் வகையிலேயே இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக நாட்டின் மதிப்பை அடமானம் வைப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ள ஷாகி சலோம், பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடியை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்படுவதே இஸ்ரேலின் எதிர்காலத்திற்கு நல்லது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.