தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அந்நாட்டின் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம் அறிவுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு மூத்த நிபுணர் ஸாக்கி ஷெலோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர், இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்த உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறியுள்ளார்.
தேசிய கவுரவம் என்பது ஆடம்பரமானது அல்ல, அது ஒரு சொத்து என்பதைப் பிரதமர் மோடியின் நிலைப்பாடு தெளிவுப்படுத்தியது எனக் கூறியுள்ளார்.
தேசத்தின் கவுரவத்தைப் பாதுகாப்பது எப்படி, தேசத்தின் கவுரவத்தை ஒரு சொத்தாக மாற்று வது எப்படி என்பது போன்ற முக்கியமான விஷயங்களை பிரதமர் மோடியிடம் இருந்து நெதன்யாகு கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் தெளிவான ஒரு செய்தி சர்வதேச அளவில் வெளிப்படுத்தியது என்றும், இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிடுவதை இந்தியா ஏற்காது என்ற செய்தியைப் பிரதமர் மோடியின் செயல் வெளிப்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தேசத்தின் கவுரவத்தை பாதுகாக்க வேண்டியதுதான் நாட்டின் தலைவருடைய கடமையாக இருக்க வேண்டும் என ஸாக்கி ஷெலோம் கூறியுள்ளார்.