தெலங்கானா மாநிலத்தில் விரக்தியில் விவசாயி தற்கொலைக்கு முயன்றபோது அதை கண்டு கொள்ளாத அதிகாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மஹப்பூப்நகர் அடுத்த வாத்யாலா கிராமத்தை சேர்ந்த விவசாயி கஜ்ஜல கிருஷ்ணய்யா, நிலப் பிரச்னை தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டுள்ளார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயி, தாசில்தார் புலி ராஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மனமுடைந்த கஜ்ஜல கிருஷ்ணய்யா, தாசில்தார் முன்னிலையிலேயே விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்திய நிலையில், விவசாயி-யின் செயலை கண்டுகொள்ளாமல் தாசில்தார் செல்போனை பார்த்தபடி இருந்துள்ளார்.
இது குறித்த வீடியோ காட்சி வெளியான நிலையில் தாசில்தாரின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.