டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
வடக்கு டெல்லியின் சப்ஜி மண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சாபி பஸ்தி பகுதியில் நேற்று இரவு நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
கட்டடத்தில் ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் அருகிலுள்ள கட்டடத்தில் இருந்த 14 பேரை மீட்டனர். எனினும் தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.