விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க அதிகாரிகள் பணம் வசூலிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் ஏராளமான பெண்கள் மனு அளித்தனர்.
மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க அதிகாரிகள் நாளொன்றுக்கு 120 ரூபாய் வசூலிப்பதாகவும் பணம் வழங்க மறுப்பவர்களுக்குச் சரிவர வேலை தருவதில்லை எனவும் ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பணம் தருபவர்களுக்குத் தினசரி வேலை வழங்குவதாகவும் பணம் தராததவர்களுக்கு நடப்பாண்டு 12 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.