துருக்கியில் 16 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவல்துறை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்மிர் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே துப்பாக்கியுடன் வந்த 16 வயது சிறுவன், கண்மூடித்தனமாகச் சுட்டதாக கூறப்படுகிறது.
இதில் 2 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்தச் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறுவன் துப்பாக்கியால் சுட்டதற்குக் காரணம் என்ன? சிறுவனின் பின்னணி என்ன? என்பது குறித்து துருக்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.