திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து மின்துறை அதிகாரிகள் முட்டு கொடுத்துள்ள சம்பவம் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ரெட்டாலை முத்தனூர் சாலையில் தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பங்களை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதனை செயல்படுத்தாத அதிகாரிகள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்தனர்.
இதனால் காற்றடிக்கும்போது மரக்கொம்பு சாய்ந்து விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின் கம்பங்களை மாற்ற வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.