ராஜஸ்தானில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்ற இருசக்கர வாகனத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்களின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
சுரு ரயில் நிலையத்தில், அமர்ந்திருந்த முதியவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த இளைஞர்கள் சற்றும் யோசிக்காமல் முதியவரை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து இருசக்கர வாகனத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்த அவர்கள் முதியவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சரியான நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால் முதியவர் காப்பாற்றப்பட்டார். நண்பன் பட பாணியில் சிறிதும் யோசிக்காமல் முதியவரை காப்பாற்றிய இளைஞர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.