மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கில் பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பதில் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்கராஜன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், மாநகராட்சி ஊழியர்கள் 19 பேர் மீது பணி இடைநீக்கம், பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பெண் ஒப்பந்த ஊழியர் லீமா ரோஸ்மேரி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலமாக வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.