கிருஷ்ணகிரியில் வனப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி, ராமன் தொட்டி, கும்மளம், சிகரலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடி சமூக மக்கள், வன உரிமை சட்டத்தின்படி வீட்டு மனைக்கான தனி நபர் உரிமை தர வேண்டும் எனவும், விவசாய நிலம் வழங்க வேண்டும் எனவும் கிராம சபை கூட்டத்தின் போது மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் வனக் குழுவிற்கு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் நீண்ட நாட்களாக மனுவின் நிலை பற்றி எந்தப் பதிலும் கிடைக்காமல் இருந்துள்ளது.
எனவே மனுவின் நிலை குறித்து அறியவும், தங்களுக்கு வீட்டுமனைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்திய பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டுத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.