தேனி மாவட்டத்தில் சாலைவிபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் 7 பேருக்குத் தானமாக வழங்கப்பட்டன.
கடமலைக்குண்டு அடுத்த கும்மணந்தொழு கிராமத்தை சேர்ந்த முனியாண்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் சிக்கிய முனியாண்டி மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்யக் குடும்பத்தினர் முன்வந்த நிலையில், முனியாண்டியின் இதயம், கண், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து முனியாண்டியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதுகுறித்துப் பேசிய முனியாண்டியின் தாய் ஜெயராணி, தனது மகன் இறந்தாலும், பலருக்கு மறுவாழ்வு அளித்திருப்பதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.