குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தவர்கள் மற்றும் செல்லாத வாக்குகளைப் பதிவு செய்த 15 எம்பிக்கள் யார் என்பது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட இண்டிக் கூட்டணி வேட்பாளர்ச் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 449 வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 452 வாக்குகள் கிடைத்தது.
அதே சமயம், 315 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகச் சொன்ன இண்டி கூட்டணி 300 வாக்குகளை மட்டுமே பெற்றது.
இது எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர்க் கட்சி மாறி வாக்களித்ததையே காட்டுகிறது. தமிழகத்தில் உள்ள கட்சியோ, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியோ வாக்கை மாற்றிச் செலுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், கட்சி மாறி வாக்களித்தவர்கள் மற்றும் செல்லாத வாக்குகளை பதிவு செய்தவர்கள் யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.