தஞ்சையில் பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சசிகுமார் என்பவர், இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கலைஞர் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த சசிகுமாரை எதிர்தரப்பைச் சேர்ந்த சிலர் பின்தொடர்ந்து வந்து வழிமறித்துள்ளனர்.
அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய சசிகுமாரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றுவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.