கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டு ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
அதன்படி, 2001-ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது அமெரிக்க வர்த்தக துறையின் தேசிய சுற்றுலா நிர்வாகத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு செல்ல விசா பெறும் முறைக்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விசா பெற பல மாதங்கள் காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர் ஒருவர் விசா பெற வேண்டும் எனில் தங்களது சொந்த நாடான இந்தியாவில் இருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என அமெரிக்கா கட்டுப்பாடு விதிதுள்ளது.
இதற்கு முன்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் தங்கியிருக்கும் நாட்டில் இருந்தே விசா பெற்று அமெரிக்கவுக்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.