பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று கூறினீர்களே, செய்தீர்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மக்களுக்கு போலி நம்பிக்கைகள் கொடுத்து எப்படியெல்லாம் விதவிதமாக ஏமாற்றலாம் என போட்டி வைத்தால், அதில் திமுக மட்டும் தான் தனித்து வெற்றி பெறும் என்றும்,
அந்தளவிற்கு நாள்தோறும் பொய்களிலும் புரளிகளிலும் புரண்டு கொண்டிருக்கும் தில்லுமுல்லு திமுகவின் அடுத்த போலி தேர்தல் வாக்குறுதி தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? எனக் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன்,
வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.