திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருமலைக்கு குடும்பத்துடன் வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி வரவேற்றார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை நடந்த அபிஷேக சேவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதம் முழங்க நிர்மலா சீதாராமனுக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.