நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர்.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் உலா வரும் நிலையில், கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் அதிகாலை 3 மணிக்கு பெண் காட்டு யானை தவறி விழுந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் 4 மணி நேரமாக போராடி தண்ணீர் தொட்டியை உடைத்து யானை செல்ல வழி அமைத்து கொடுத்தனர்.