இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாக்பூரில் நடைபெற்ற பிரம்மகுமாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியால் தங்களது நிலைமை என்னவாகுமோ என உலக நாடுகள் அஞ்சுவதாகக் கூறினார். இதனால்தான் ஏழு கடல் தாண்டி அமைந்துள்ள நாடுகள் கூட இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிப்பதாகவும் அமெரிக்காவை அவர் மறைமுகமாகத் தாக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா வளரக் கூடாது என்பதால், நம் மீது அழுத்தம் போடுவதாகவும், அதற்காகப் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதாகவும் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.