ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லையில் காங்கிரஸ் மாநாட்டிற்கு அரசு பஸ்களே சென்றதாகவும், எதிர்கட்சிகளுக்கு பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
திமுக, காங்கிரஸ், விசிக என்றால் ஆட்கள் நடமாட முடியாத அளவிற்கு பேனர்கள் வைக்கின்றனர் என்றும், சமூக வலைதளத்தில் ஆளும் கட்சியை பற்றி ஏதாவது போட்டால் கைது செய்து சிறையில் அடைப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைப்பதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
===