உக்ரைனின் கீவ் நகரம் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ரஷ்யா நிறுவனங்களுக்குப் பிரிட்டன் தடை விதித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இருநாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் உக்ரைனின் கீவ் நகரம் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் கப்பல்களின் மீதான தடை, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.
அத்துடன் ரஷ்யாவில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், வேதிபொருள்கள், வெடிபொருள்களை வழங்கி அந்நாட்டின் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் 30 நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.