இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையிலும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, அதன் இறக்குமதியை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா, உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கைக்காக இந்தியா நிதியுதவி வழங்குவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது.
இது நியாயமற்றது எனக் கண்டனம் தெரிவித்த இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படாது என்றும், நாட்டு நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து எண்ணெய் வாங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணைய் இறக்குமதியை அதிகரித்துள்ள இந்தியா, கடந்த ஜுலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதம் இறக்குமதி விகிதத்தை அதிகரித்துள்ளது
அதன்படி ஜூலை மாதம் 27 ஆயிரத்து 945 கோடி ரூபாய் அளவிற்கு இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த மாதம் 30 ஆயிரத்து 15 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டுமென அமெரிக்கா கூறியிருந்த நிலையில், தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் புதை வடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்துவரும் இந்தியாவுக்குப் பலரும் பாரட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.