குஜராத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் போலீசார்ச் சோதனை மேற்கொண்டனர். அப்போது 82 ஆயிரம் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு 2 கோடியே 38 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் அனைத்தும் காந்திநகர் சாலையில் பரப்பப்பட்டு ரோடு ரோலர் வாகனம் மூலம் அழிக்கப்பட்டன.