கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி புகுந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் மோதியது. இந்தக் கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.