மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து எரிந்த நிலையில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
மந்தசௌர் பகுதியில் உள்ள காந்திசாகர் வனப்பகுதியில் வெப்ப காற்று பலூன் ஒன்றில் பறக்க மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விரும்பினார்.
அதற்காக அவர் பலூனில் ஏறிய சில நிமிடங்களில் பலூன் பறக்கத் தயாராக இருந்த போது எதிர்பாராத விதமாகத் தீப்பிடித்தது.
பலத்த காற்றினால் பலூன் மேலே எழும்ப முடியாமல் தடுமாறியது. இதையடுத்துச் சில விநாடிகளில் தீப்பிடிக்க, சமயோஜிதமாகச் செயல்பட்ட முதல்வர் மோகன் யாதவின் பாதுகாவலர்கள் அவரை காப்பாற்றினர்.
நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.