ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்ட அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தவுசா மாவட்டத்தின் சுடியாவாஸ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் உணவு உட்கொண்டனர்.
பின்னர் அவர்களுக்குத் தலைவலி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் சாப்பிட்ட உணவு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.