ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருக்கின்றன. ஆயிரக்கணக்கான துருப்புக்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை வரை இரு நாடுகளிலும் நடைபெறவுள்ளது. பெலாரஸின் மேற்கு எல்லைக்கு அருகில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
ஏனெனில் பெலாரசுக்குப் பக்கத்து நாடுதான் போலாந்து. பயிற்சியின் தொடக்கத்தில் 13ஆயிரம் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று பெலாரஸ் கூறியுள்ளது.
இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், நட்பு நாடுகளின் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, திறமை மேம்பாடு மற்றும் பிராந்திய ஒற்றுமையை வலுபடுத்துதல் ஆகியவை என்று ரஷ்ய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.