கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யச் சென்ற போலீசாரைத் தடுத்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குள்ளக்காபாளையம் பகுதியை சேர்ந்த விஜில்குமார் என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் விஜில்குமாருக்கு தொடர்பு உள்ளதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரை கைது செய்வதற்காகக் குள்ளக்காபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு அவர்கள் சென்றனர்.
அப்போது போலீசாரைத் தடுத்த விஜில்குமாரின் மனைவி. பெட்ரோல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அங்கிருந்து சென்றனர்.