உலகின் மிகப்பெரிய கட்சியாகப் பாஜக இருப்பதாக மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாஜகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், 14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகப் பாஜக விளங்குகிறது என்றார்.
இந்தியாவில் 20 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், 13 மாநிலங்களில் பாஜக அரசும் உள்ளது என்றும் பாஜகதான், நாட்டின் மிகப்பெரிய பிரதிநிதித்துவக் கட்சி என்றும் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.