விழுப்புரத்தில் காலி பாட்டிலை மாலையாக அணிந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி பாட்டில் விலைத் திரும்பப் பெறும் திட்டத்தால் கூடுதல் நேர பணிசுமை, கடைகளில் இட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே அந்தத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.