இளம்வயதில் எம்மி விருதை வென்றவர் என்ற வரலாற்றுச் சாதனையை, அடோல்சென்ஸ் இணையத் தொடரில் நடித்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான எம்மி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்தின் அடோல்சென்ஸ் தொடருக்குச் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட 6 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
தொடரில் நடித்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.
இதன்மூலம், மிக இளைய வயதில் எம்மி விருதை பெற்றவர் என்ற பெருமையை ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.