புகைப்பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளனர்.புகைப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் புகைப்பவர்கள் எண்ணிக்கைக் குறையவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் பேர்ப் புகை பழக்கம் காரணமாக உயிரிழக்கின்றனர் எனவும் புகையிலைத் தொடர்பான நோய்களுக்காக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
புகையற்ற, எரியாத நிகோடின் குறைந்த அளவு அபாயங்களைக் கொண்டுள்ளது என்பது அறிவியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இருப்பினும் நிகோடின் பைகளால் ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது எனவும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.