புரூனே மன்னர் ஹசனல் போல்கியா அலாதி கார் பிரியராக இருக்கிறார். 600 ரோல்ஸ் ராய்ஸ் , 25 ஃபெராரி கார்களைத் தன்வசம் வைத்திருந்தும், ஆசை அடங்காமல் மேலும் பல கார்களை வாங்கிக் குவித்து வருகிறார். எதனால் அவருக்கு இந்தக் கார் மோகம்?பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…
உலகம் முழுவதும் கார் மோகம் கொண்ட மனிதர்களுக்குக் குறைவே இருக்காது. அதிலும், ஆண்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஸ்டீரிங்கில் கைவைத்து டாப் கியரில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால் அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.
புருனே மன்னர் ஹசனல் போல்கியாவும் அப்படிப்பட்ட நபராகத் தான் இருக்கிறார். சிறுவயதிலிருந்தே கார் மோகம் கொண்டவராக இருக்கும் ஹசனல் போல்கியாவின் கண்களில் TOP BRAND கார்கள் சிக்கத் தவறுவதே இல்லை. புதிதாக எந்தவொரு கார் சந்தைக்கு வந்தாலும், அது பற்றிய தகவலை ஹசனல் போல்கியா நிச்சயம் அறிந்து வைத்திருப்பார்.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஹசனல் போல்கியாவுக்குக் கார் பித்தன் என்று பெயர் சூட்டினால் கூட அது பொருத்தமாகத் தான் இருக்கும் . அந்த அளவுக்கு கார்க் கலெக்ஷனில் கவனம் செலுத்த கூடியவர்ப் புருனே மன்னர்
இதுவரைக்கும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை வாங்கிக் குவித்திருக்கும், ஹசனல் போல்கியாவுக்கு மிகவும் பிடித்த பிராண்ட் என்றால், ரோல்ஸ் ராய்ஸ் தானாம். அதற்காகவே, 600-க்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிக் குவித்திருக்கிறார் . அதிலும் 24 காரட் தங்கத்தினால் உருவான ரோல்ஸ் ராய்ஸ் கார் புருனே மன்னருக்கு எப்போதும் ஸ்பெஷல்..
இதுமட்டுமல்ல, FERRARI, BUGATTI, BENTLEY ரகக் கார்கள் மீதும் ஹசனல் போல்கியாவுக்கு அளப்பரிய காதல் உண்டு. மொத்த மதிப்பை கணக்கீட்டு பார்த்தால் 5 பில்லியன் டாலர் இருக்கும் என்ற செய்தி தலைசுற்ற வைக்கிறது.
1967-ம் ஆண்டு முதல் புருனே மன்னராக இருக்கும் ஹசனல் போல்கியா, ஆயிரத்து 788 அறைகள் கொண்ட பிரமாண்ட அரண்மனையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அரண்மனை வளாகத்திலேயே மிகப்பெரும் கார் கேரேஜ் அமைத்துக் காஸ்ட்லி கார்களை கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வருகிறார்.
புருனே மன்னர் ஹசனல் போல்கியாவின் ஆண்டு வருமானம் 30 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், அவரது கலெக்ஷனில் இன்னும் என்னென்ன கார்கள் எல்லாம் சேர போகின்றன என அவரது FANS-கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை வாங்கி ஹசனல் போல்கியாவைப் பீட் செய்யும் நபர் இனி பிறந்து தான் வர வேண்டும் எனவும் அவர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.