டெல்லி சென்றுள்ள அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளார்.
டெல்லிச் சென்றடைந்த அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் எம்.பிக்கள் மற்றும் தம்பிதுரை, தனபால் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பளித்தனர்.
அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிச் சென்ற இவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்திக்க உள்ளார்.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள இந்தச் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலின் தற்போதை நகர்வுகள் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்க உள்ள இபிஎஸ் முத்துராமலிங்க தேவருக்குப் பாரத ரத்னா விருது வழங்குவது குறித்தும் , அவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கக் கோரியும் கோரிக்கை வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.