உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து
அதிகரித்து, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.