மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்கி இருக்கும் விருஷபா எனும் பான் இந்தியா படத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடிக்கின்றனர்.
பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகவும், அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தியும் இப்படம் தயாராவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விருஷபா படத்தின் டீசரை வரும் 18ம் தேதி வெளியிடுவதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.