ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சண்டை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷார் தர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அசாதாரண சூழல் நிலவியபோது, சண்டை நிறுத்தத்திற்குத் தாங்கள்தான் முதலில் அழைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
சண்டை நிறுத்தத்திற்கு உதவுமாறு அமெரிக்க அமைச்சரிடம் கேட்டதாகவும், ஆனால் இருதரப்பு பிரச்னையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என அமெரிக்க அமைச்சர் கூறியதாகவும் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் கூறியிருக்கிறார்.
இந்தியா – பாகிஸ்தான் போரை வர்த்தகத்தைப் பயன்படுத்தி முடிவுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வரும் நிலையில், அதனை மறுக்கும் வகையில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் பேட்டி அமைந்துள்ளது.