சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதியின் உரையை கேட்காமல் பெண்கள் கலைந்து சென்றனர்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்காகக் காலை 8 மணி முதலே அதிகளவு பெண்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், துணை முதலமைச்சர் உதயநிதி வராததால் 11 மணியளவிலேயே பெரும்பாலான பெண்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
அப்போது, அரங்கில் இருந்த சேர்கள் காலியாவதைக் கண்ட விழா ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அரங்கின் கதவை பூட்டினர். இதனால் கழிவறைக்குச் செல்ல முடியாமல் பெண்கள் அவதியடைந்தனர்.
இதையடுத்து மதியம் ஒன்றரை மணியளவில் விழா மேடைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற தொடங்கினர். ஆனாலும் அங்கிருந்த பெண்கள் உரையை கவனிக்காமல் உடனடியாகப் புறப்பட்டு சென்றனர்.