சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட D.P.கோல்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் நகைக்கடை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் உள்ள அலுவலகத்தில் பத்து பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.