தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தி ஊடுருவல்காரர்களை ஆதரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய மக்களை நம்பாமல் ஊடுருவல்காரர்களை நம்பும் காங்கிரஸ் கட்சி, தேர்தல்களில் வெற்றிப் பெற விரும்புவதால் ஊடுருவல்காரர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என வலியுறுத்துவதாக விமர்சித்தார்.
மேலும் இதனை மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.