உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!
Jul 30, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் பழமையான 3D வரைபடத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 13 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 3டி வரைப்படத்தைச் சமீபத்தில் கண்டறிய, அது தொல்லியல் துறையினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

புகழ்பெற்ற செகோக்னோல் பாறைகளுக்குள் அமைந்துள்ள இந்த 3டி புகைப்படம் பாரிஸ் படுகையைக் குறிப்பதாக அமைந்துள்ளது. தங்களது அன்றாட வாழ்க்கைக்கு நீரோட்டத்தின் திசை முக்கியம் எனக் கருதிய கற்கால மக்கள் , 3டி வரைபடத்தை உருவாக்கி இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செகோக்னோல் பாறைகளுக்குள் அமைந்துள்ள இந்த 3டி வரைபடம், பாலியோலிதிக் ஸ்டைலில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாலியோலிதிக் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக இந்த வரைபடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பொறியியல் திறன் படைத்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்றும் அவர்கள் அடித்து கூறுகின்றனர். இன்றைய காலத்து 3டி மேப்கள் போல், தத்ரூபமான தகவல்கள் இடம்பெறாவிட்டாலும், நீரோட்டம் எங்கிருந்து தொடங்குகிறது, எங்கு சேர்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் பண்டைகால வரைபடத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியோலிதிக் மக்கள் நேரம், தூரம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல், திசைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது வாழ்வியலை முன்னெடுத்துள்ளனர் என்றும் கருத்து கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 3டி வரைபடமே பழமை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. BRONZE AGE எனப்படும் உலோகக் காலத்தில் இருந்தே 3டி கான்செப்ட் தோன்றியதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அடிலெய்டு பல்கலை ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு, அதனைச் சுக்கு நூறாக உடைத்துள்ளது.

கற்கால மக்களும் முப்பரிமாணம் குறித்து அறிந்து வைத்தது உறுதியாகி உள்ளதால், தொல்லியல் துறையினருக்கு அது மேலும் ஆர்வமூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. உலோகக் காலங்களில் மக்களின் வாழ்வியல் குறித்து ஆராயப்படுவது நிறுத்தப்பட்டுக் கற்கால மக்களை நோக்கி தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை நகர்த்தியுள்ளது.

Tags: World's oldest 3D map: Researchers discover 13 thousands -year-old drawing!உலகின் பழமையான 3D வரைபடம்ஆராய்ச்சியாளர்கள்அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

Next Post

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies